விஜய்யுடன் மோதுகிறார் எஸ்.ஜே.சூர்யா

இசை படத்தின் தோல்வி காரணமாக இப்போதைக்கு படம் இயக்கப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதேசமயம், தற்போது நடிப்பில் முழுக்கவனத்தை செலுத்தி வரும் அவர், இறைவி படத்தை அடுத்து செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அதையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சம்பவாமி யுகே யுகே படத்தில் வில்லனாக நடித்து வருபவர், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61-வது படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

மேலும், விஜய்யின் 61வது படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிக்கயிருந்த ஜோதிகா படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் விலகி விட்டதால் அதையடுத்து நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு சென்னை பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்து வந்தார். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அப்போது விஜய் 61-வது படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா- விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

Related Posts