விஜய்யுடன் பாடப்போகும் ஸ்ருதி…?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாட ஆரம்பித்துள்ளார். துப்பாக்கியில் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக தொடங்கியது.

vijay-shuruthy

சிம்புதேவன் இயக்கும் புலியில் விஜய்யுடன் ஸ்ருதியும் நடிக்கிறார். இருவருமே சிறந்த பாடகர்கள். இருவரையும் வைத்து டூயட் பாடலை பாட வைக்க வேண்டும் என்பது சிம்புதேவன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் விருப்பம்.

விஜய்யும் அவர்களின் விருப்பத்துக்கு ஓகே சொன்னதாக தகவல்.

புலியின் ஆடியோ உரிமையை சமீபத்தில்தான் சோனி மியூஸிக் வாங்கியது.

Related Posts