விஜய்யுடன் தொடர்ந்து நடிக்க ஆசைப்படும் சமந்தா!

லிங்குசாமியின் அஞ்சான் படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார் சமந்தா. ஆனால் அந்த படம் அவரை ஏமாற்றி விட்டது. ஆனபோதும், சமந்தாவின் கிளாமர் ரசிகர்களை போய் சேர்ந்தது. அதனால் அவருக்கான ரசிகர்களும் தமிழகத்தில் அதிகரித்தனர்.

samantha

அதையடுத்து விஜய்யுடன் அவர் நடித்த கத்தி வெற்றி பெற்று சமந்தாவின் கோலிவுட் மார்க்கெட் உயர்த்தியது. அதோடு, தமிழில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் அவருக்கு அதிகரித்தது. அதனால் தெலுங்கு படங்களை குறைத்து விட்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தினார் சமந்தா.

ஆனால், அதையடுத்து நடித்த பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன், படங்கள் சமந்தாவுக்கு அடுத்தடுத்து தோல்விகளாக அமைந்தபோதும், மீண்டும் விஜய்யுடன் நடித்த தெறி அவருக்கு ஹிட்டாக அமைந்தது. அதன்பிறகு சூர்யாவுடன் நடித்த 24 பெரிதாக கைகொடுக்க வில்லை. என்றாலும் விஜய் படங்கள் தனக்கு வெற்றிகரமாக அமைந்து வருவதால், மீண்டும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் சமந்தாவுக்கு அதிகரித்துள்ளதாம்.

அந்த வகையில், விஜய்யின் 60-வது படத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும் அதற்கடுத்து அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் நடித்து விட வேண்டும் என்பதில் சமந்தாவின் கவனம் திரும்பியுள்ளதாம்.

Related Posts