இளைய தளபதி விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அவர் நடனம் தான்.
அந்த வகையில் கத்தி படத்தில் விஜய் நடனத்தில் கலக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் முருகதாஸ் கூறியிருந்தார்.
தற்போது செல்பி புள்ள பாடலுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது. இதில் விஜய் மற்றும் சமந்தாவுடன் இணைந்து 100 நடன கலைஞர்கள் ஆடுகிறார்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு வெளிவரும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.