விஜய்யுடன் இணையும் பிரபுதேவா

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்துள்ள பிரபுதேவா, கடைசியாக தமிழில் ‘எங்கள் அண்ணா’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு தமிழில் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா, தற்போது தமிழில் நடிக்க ஆர்வம் காண்பித்துள்ளார்.

இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ‘மதராசப்பட்டணம்’, ‘தாண்டவம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களை இயக்கிய விஜய் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தை பிரபுதேவா தயாரிக்க இருப்பதாகவும், திகில் படமாக உருவாக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.

Related Posts