கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது இப்படம் முழுவதும் ஃபேன்டஸி படம் கிடையாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
படத்தின் பெயர் மாரீசன் என்றும் சொல்லப்பட்டது. அதையும் தற்போது மறுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து சிம்புதேவனின் யூனிட்டைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால்.. புதிய தகவல்கள் சொல்கிறார்கள்.
இப்படத்தில் முதலில் ஸ்ரீதேவியும், சுதீப்பும் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது, பின்னர் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
ஆனால், ஸ்ரீதேவியும், நான் ஈ புகழ் சுதீப்பும் நடிப்பது உண்மைதான் என்கிறார்கள்.
ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் மட்டும்தான் படத்தில் ஃபேன்டஸியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
முழுப்படமும் விஜய் நடித்த கில்லி படத்தைப்போல் மாஸ் படமாக இருக்குமாம்.
இப்படத்தில் வரும் வில்லன் பாத்திரம், கில்லி படத்தின் பிரகாஷ் ராஜ் கேரக்டர் பேசப்பட்டதைவிட அதிகமாக பேசப்படுமாம். இந்த வேடத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சுதீப்.
பிரகாஷ்ராஜ் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சுதீப்பை கமிட் செய்து உள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி முதல் ஈசிஆரில் உள்ள உத்தண்டியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்றில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.