விஜய்யின் நடனத்திறமை அசாத்தியமானது!: கீர்த்தி சுரேஷ்

பைரவா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அப்படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே விஜய்யுடன் நடிக்கும் அனுபவங்களை அவ்வப்போது கூறி வருகிறார்.

keerthy-suresh

தற்போது இன்னொரு தகவலையும் வெளியிட்டுள்ளார். அதாவது, விஜய்யின் தீவிரமான ரசிகையான எனக்கு இந்த படத்தில் சான்ஸ் கிடைத்தது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது.

என்றாலும், மற்ற நடிகர்களுடன் கேசுவலான நடிக்கத் தொடங்கிய எனக்கு விஜய்யை நெருங்கவே பயமாக இருந்தது.

பின்னர் அவர் என்னிடம் சகஜமாக பேசிப்பழகத் தொடங்கிய பிறகுதான் அந்த பயம் படிப்படியாக என்னை விட்டு விலகியது.

மேலும், விஜய் ஏன் இத்தனை பெரிய நடிகராக இருக்கிறார் என்பதற்காக பல காரணங்கள் இருந்தாலும், நான் அவரிடமிருந்து ஒரு விசயத்தை தெரிந்து கொண்டேன். அது அவருடைய டான்ஸ். அப்படியொரு அபாரமான டான்சர் அவர்.

எத்தனை ரிஸ்க்கான நடன அசைவுகள் என்றாலும் ஒருதடவை டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்கொடுப்பதை பார்த்து விட்டு உடனே ஆடிவிடுவார். அது ரொம்ப பெரிய விசயம். அந்த வகையில், விஜய்யின் நடனத்திறமை அசாத்தியமானது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Related Posts