விஜய்யிடம் பாராட்டு பெற்ற கீர்த்தி சுரேஷ்!

விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேருவது அத்தனை எளிதாக விசயமல்ல. அந்த வகையில் முன்னணி நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு எளிதில் கிடைத்து வந்தது. ஆனால் இரண்டே படங்கள் வெளியான நிலையில், விஜய்யின் 60-வது படத்தில் அவருக்கு ஜோடி சேரும் அதிர்ஷ்டம் கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்துள்ளது.

vija

ஆரம்பத்தில் இந்த படத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறியாக இருந்தநிலையில், திருநெல்வேலி மண்வாசனைக்கதையில் அந்த படம் உருவாவதாக முடிவெடுத்தபோது அந்த வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ்தான் பொருத்தமாக இருந்தாராம். அதனால் மறுயோசனையின்றி அவரை விஜய்யிடம் பேசி ஒப்பந்தம் செய்து விட்டாராம் டைரக்டர் பரதன்.

ஆக, வந்த வேகத்திலேயே விஜய்யின் ஜோடி என்கிற பெருமைக்குரிய இடத்தை பிடித்து விட்ட கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக பல மாதங்களாக தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்தவர். அப்பட பூஜையிலும் கலந்து கொண்டார். அதையடுத்து, நேற்று முதல் அவர் விஜய்யுடன் நடித்துள்ளார். அவர்கள் நடித்த ரொமான்ஸ் காட்சிதான் முதன்முதலாக படமாக்கப்பட்டதாம். அதுவும் சில டேக்குகள் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விஜய்யின் பாராட்டை பெற்றாராம்.

Related Posts