விஜய்சேதுபதிக்கு ஜோடியான சூப்பர் ஸ்டார் நாயகி?

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகிக் கொண்டே வருகிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ படத்தை இயக்கிய பிறகு கோகுல், காமெடி கலந்த ஒரு கதையை தயார் செய்து வந்ததாகவும், தற்போது அந்த கதை எழுதும் பணி முடிந்துவிட்டபடியால் அதில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகி, ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘2.ஓ’ படத்தில் நடித்துள்ள ஏமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்யப்போவதாக படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts