தனுஷ் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை வட இந்தியாவிலும் வெற்றி கொடி கட்டியவர்.
சமீபத்தில் இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்து விட்டார்.
இதனால் இவரது ரசிகர் பலம் இன்னும் பல மடங்கானது. தற்போது விஜய்யின் கோட்டை என்று கருதப்படும் கேரளாவிலும் தனுஷ் கால் பதித்து விட்டார்.
இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் அனேகன் படம் கேரளாவில் விஜய் படத்திற்கு கிடைக்கும் தியேட்டர் போல் அனேகன் படத்திற்கும் 100க்கு மேல் திரையரங்குகள் கிடைத்துள்ளது.