விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்கலாமா?

இளையதளபதி விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை திரும்ப பெற்றுவிடலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்ட வார பத்திரிகை யோசனையில் உள்ளதாம்.

vijay

தமிழகத்தில் உள்ள பிரபல வார பத்திரிகை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது. கருத்துக்கணிப்பில் விஜய் வெற்றி பெற்றதாக அந்த பத்திரிக்கை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு நடந்து வரும் சம்பவங்களால் அந்த பத்திரிகை யோசனையில் உள்ளதாம்.

கருத்துக்கணிப்பில் உண்மையில் வென்றது அஜீத் என்றும், அவர் விஜய்யை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார் என்றும் செய்திகள் வெளியாகின.

கருத்துக்கணிப்பில் அஜீத் வெற்றி பெற்றிருக்க விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அறிவித்ததை கண்டித்து ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதையடுத்து விஜய்க்கு அளித்த அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை திரும்ப பெறலாமா என்ற யோசனையில் அந்த வார பத்திரிகை உள்ளதாம்.

இப்படி பிரமாண்ட கருத்துக்கணிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்வானது நீங்கள் தான் என்று விஜய்யிடம் கூறிவிட்டு தற்போது அந்த பட்டத்தை திரும்ப பெற யோசிப்பதா என்று விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் தற்போது தான் நடித்து வரும் கத்தி படத்தில் பெயர் போடுகையில் இளையதளபதிக்கு பதிலாக அடுத்த சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போட நினைத்ததாகவும் கூறப்படுகிறது.

Related Posts