விஜயகுமார் சுலக்சனின் இறுதி சடங்கு இன்று

கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

sulaxsan

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று பிற்பகல் மாணவனது இல்லத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

மாணவனின் பூதவுடல் அவரது வீட்டிலிருந்து இன்று பிற்பகல் எடுத்துச் செல்லப்பட்டு உடுவில் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

அதேவேளை, குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கிளிநொச்சி 155 ஆம் கட்டையைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜனின் பூதவுடன் நேற்று பாரதிபுரம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த மாணவர்களான அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜன் ஆகிய மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் 20 ஆம் திகதி இரவு 11.30 அளவில் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts