விஜயகலா மகேஸ்வரன் கைது!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை தடுக்கும் காவல்துறை பிரிவினரால் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக விஜயகலா மகேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts