விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறவிடப்பட்ட வரி நீக்கம்

mahintha1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

இதன்பிரகாரம், அரச, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட இலாபம் மற்றும் நட்டம் ஈட்டும் கணக்கு வழக்குகளை பேணுகின்ற தனியார் மற்றும் அரச நிறுவனங்களைச் சேர்ந்த சேவையாளர்களின் வீட்டுக்கடன் வரி, அனர்த்த நிவாரண வரி, வாகன கடன் வரி, வைத்திய செலவை கட்டுதலுக்கான வரி, மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கான சேர்க்கப்பட்ட வரிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு பணித்துள்ளார்.

Related Posts