விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை பணத்தை வங்கியில் வைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களிடமிருந்து இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related Posts