விசாரித்த பொலிஸ் அத்தியட்சகரை அச்சுறுத்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன

Vass-gunavarththanaபம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன விசாரணை நடத்திய பொலிஸ குழுவினரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சாஹாப்டீனிடம் சானி அபேசேகர இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர தலைமையிலான குழுவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் விசாரணை நடத்திக் கொண்டுள்ள நிலையில், நீங்கள் என்ன செய்வீர்கள் என எனக்குத் தெரியும் ‘நான் ஓர் கொலையாளி, என்னை காலத்திற்கும் சிறையில் வைத்திருக்க முடியாது. நான் வெளியே வந்ததும் என்ன செய்வேன் என்று பாருங்கள்’ என வாஸ் குணவர்தன அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இதேவேளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts