விசாரணை முடியும் வரை மத்திய வங்கி ஆளுநருக்கு விடுப்பு

மத்திய வங்கியின் திறைசேரி பிணைப் பத்திரங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் விடுப்பில் செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil

பாராளுமன்றத்தில் இன்று ஆற்றும் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்ட திறைசேரி பிணைப் பத்திரங்கள் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த விசாரணைகளுக்காக அண்மையில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு காமினி பிடிபத தலைவராக உள்ளதோடு, மகேஷ் களுகம்பிடிய மற்றும் சந்திமால் மென்டிஸ் ஆகியோரும் இதில் அடங்குகின்றனர்.

Related Posts