விசாரணை படத்தை பாராட்டிய ரஜினி

அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் விசாரணை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகவுள்ளது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

vesaranai

பலத்த எதிர்பார்ப்புகளிடையே வெளிவரும் விசாரணை வெளிவருவதற்கு முன்பே, திரையுலக பிரபலங்கள் பலருக்கும் இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். படம் பார்த்த அனைவரும் படத்தை போற்றி வருகின்றனர். மேலும், இப்படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கும் இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி, விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. இது, உலக படவரிசையில் ஒரு தமிழ் படம். வெற்றிமாறன் – தனுஷுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியிடமிருந்து விசாரணை படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts