விசாரணை அறிக்கையுடன் கொழும்பு வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை கைளிப்பதற்காக விரைவில் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நாவின் 30வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அதற்கு முன்னர் அதனை இலங்கை ஜனாதிபதியிடம் கைளிப்பதற்காக அவர் வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை, இம்மாதம் இலங்கையிடம் கைளிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும், அதனை பகிரங்கமாக வெளியிடுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னரே இலங்கையிடம் கையளிக்கப்படும் என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

Related Posts