விக்ரம் பிரபு படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா

விக்ரம் பிரபு நடிப்பில் ‘வாகா’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஷாமிலி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்திற்குப் பிறகு ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராகிய பிரபாகரன், இப்படத்திற்குப் பிறகு உதயநிதியை வைத்து ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சரியாக போகாததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்கள் வெளியாகவுள்ளது.

Related Posts