விக்ரம் நடிப்பில் ‘சாமி’ இரண்டாம் பாகம் உருவாகிறது

விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி விக்ரம்-திரிஷா இருவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த படம் ‘சாமி’. ஹரியின் திரைக்கதை, விக்ரம் நடிப்பு, ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களைக் கவர்ந்ததில் பாக்ஸ் ஆபீஸில் இப்படம் பட்டையைக் கிளப்பியது.

Vikram-Saamy

‘சாமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-வது பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஹரி இறங்கினார். இந்நிலையில், விக்ரமை வைத்து ‘சாமி’ இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக ஹரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘இருமுகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இந்த அறிவிப்பை ஹரி வெளியிட்டுள்ளார். ஒளிப்பதிவாளராக பிரியனும், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். ‘இருமுகன்’ படத்தைத் தயாரித்த சிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதி செய்த பின் படம் குறித்த முழுமையான தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts