விக்ரமுடன் மோதுகிறார் தனுஷ்!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன். இந்த படத்தில் இரண்டுவிதமான வேடங்களில் நடித்துள்ள விக்ரமுடன் நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமைய்யா, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Vikram-Dhanush

இந்த படம் செப்டம்பர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது இதே நாளில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும், தனுஷின் தொடரி படம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று ரிலீஸ் தேதியை மாற்றியவர்கள் இப்போது செப்டம்பர் 2-ந்தேதியை அறிவித்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், செப்டம்பர் 5-ந்தேதி விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால், படத்திற்கு நல்லதொரு ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்களாம். ஆக, மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகள் அதிரடியாக நடந்து கொண்டிருக்கிறது.

Related Posts