விக்ரமுடன் இணையும் கவுதம்மேனன்?

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் இன்று முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

gautham-vikram

இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் அடுத்ததாக சந்தானத்தை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், விக்ரமிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு விக்ரமை வைத்து ஒரு படம் பண்ணுவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். விக்ரம் அடுத்ததாக ‘சாமி-2’ பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ‘இருமுகன்’ இயக்குனர் ஆனந்த் சங்கரின் அடுத்த படத்திலும் விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே, கவுதம் மேனனும், விக்ரமும் தங்கள் படங்களை முடித்துவிட்டு இணைவார்களா? அல்லது அதற்கு முன்னதாகவே இணைவார்களா? என்பது பெரிய கேள்விக்குறியே. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts