இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தற்போது நிறைய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தருவதால், தொடர்ந்து அதுமாதிரியான வேடங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கவுதம் மேனனின் கனவுப் படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பார்த்திபனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
‘துருவ நட்சத்திரம்’ படத்தை கவுதம் மேனன் இயக்குவதோடு மட்டுமில்லாமல், அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கு பட ஹீரோயின் ரீது வர்மா இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.