விக்ரமுக்கு ஜோடியான ஸ்ரீப்ரியங்கா

வாலு படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க இருக்கிறார்.

‘கங்காரு’, ‘வந்தாமல’, ‘நிலா மீது காதல்’, ‘அகடம்’, உட்பட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீப்ரியங்காவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, வெறுத்துப்போன அவர், தன் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கே போய்விட்டார்.

பாண்டிச்சேரி போன ஸ்ரீபிரியங்காவுக்கு விக்ரமுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் அதிர்ஷ்டம் தேடி சென்றிருக்கிறது. சின்ன சின்ன ஹீரோக்கள் உடன் நடித்து வந்த ஸ்ரீப்ரியங்காவுக்கு விக்ரம் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

வாலு படம் வெளிவராமல் முடங்கிக் கிடந்த நேரத்தில், அவருக்கு அடுத்த பட வாய்ப்பை கொடுக்க முன் வந்தவர் சுரேஷ் காமாட்சி. ஜெய் ஹீரோவாக நடிக்க இருந்த அந்தப் படம் பல்வேறு காரணங்களால் ட்ராப் செய்யப்பட்டது. ஆனாலும் சுரேஷ்காமாட்சி உடன் தொடர்பில் இருந்தார் விஜய் சந்தர். சுரேஷ்காமாட்சியின் சிபாரிசின் பேரிலேயே ஸ்ரீப்ரியங்காவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் விஜய்சந்தர்.

Related Posts