விக்ரமுக்கு ஜோடியாகும் ராகுல் ப்ரீத்சிங்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்த இருமுகன் படத்தை அடுத்து ஹரி இயக்கும் சாமி-2 படத்தில் நடிக்கிறார் விக்ரம்.

vikram-rahul

சாமி படம் திருநெல்வேலியை மையமாகக்கொண்ட கதையில் உருவான போன்று இந்த படம் தூத்துக்குடி கதையில் உருவாகிறதாம்.

தற்போது சிங்கம்-3 படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட ஹரி, சாமி-2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் தொடங்கி விட்டதால், சிங்கம்-3 படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படம் தொடங்கி விடும் என்கிறார்கள்.

மேலும், சாமி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த திரிஷாவும் சாமி-2வில் நடிக்கிறார். என்றாலும், அவர் நாயகியாக நடிக்கவில்லையாம். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. விக்ரமிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறாராம்.

தற்போது தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக் கும் துப்பறிவாளன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படங்களில் நடிக்கும் ராகுல்ப்ரீத் சிங், சாமி-2வோடு சேர்த்து ஒரே நேரத்தில் மூன்று தமிழ் படங்களில் நடிக்கிறார்

Related Posts