விக்ரமிற்கு கெளதம்மேனன் கொடுத்த பிறந்த நாள் பரிசு!

அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வந்தார் கெளதம்மேனன்.

திடீரென்று ப.பாண்டி படத்தை இயக்கும் பணிகளில் தனுஷ் பிசியாகி விட்டதால், விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் படவேலைகளை தொடங்கினார் கெளதம் மேனன்.

அதோடு, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே லண்டன் சென்று அப்படத்திற்கான பர்ஸ்ட் லுக், டீசரை ரெடி பண்ணி வெளியிட்டார்.

அதையடுத்து, துருவநட்சத்திரம் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்த விக்ரம், பின்னர் ஸ்கெட்ச் படத்தில் நடித்து வருகிறார். அதனால் தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா பட வேலைகளில் மறுபடியும் இறங்கியுள்ளார் கெளதம் மேனன். இந்நிலையில், நேற்று விக்ரமிற்கு 51வது பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாகவே துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது டீசரை விக்ரமின் பிறந்த நாள் பரிசாக வெளியிட்டார் கெளதம்மேனன்.

அப்படி வெளியிடப்பட்ட அந்த டீசரை நேற்று ஒரேநாளில் 11 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அத னால் இந்த பிறந்தநாள் விக்ரமிற்கும், அவரது ரசிகர்களுக்கும் உற்சாகமாக பிறந்த நாளாக அமைந்துள்ளது

Related Posts