விக்ரமின் ஐ – ஓர் முன்னோட்டம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே ரிலீசாகுற வரையில் அல்லது அவராக சொல்கிற வரையில் அது தங்கமலை ரகசியம்தான். இடையில் ஏதாவது ஒரு வழியில் கசிந்தால்தான் உண்டு.

I-ifilim-vikram-

அப்படி சில விஷயங்கள் இப்போது கசிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஐ பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.

* ஐ ஒரு விளையாட்டை பற்றிய படம் அல்ல. சாதாரண மனுஷன் அமானுஷ்ய சக்தி பெற்றவனாக மாறி என்ன செய்கிறான் என்கிற கதை. அது மாய மந்திரமோ, தெய்வ சக்தியோ அல்ல, விஞ்ஞான ரீதியாக கிடைக்கும் அமானுஷ்ய சக்தி.

* விக்ரம் 40 கிலோ கொண்ட ஒல்லி பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், அந்நியன் ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட்அப்கள் இருக்கிறது.

* மொத்தம் 5 பாடல்கள், அதில் “என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்…” என்கிற பாடலை ஏ.ஆர்.ரகுமானும், இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை பாடல் ஒன்றை அனிருத்தும் பாடி உள்ளனர்.

* கொடைக்கானலில் 300 ஏக்கரில் விதவிதமான ரோஜாக்களை பயிரிட்டு வளர்த்து வெவ்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடத்தி ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்கள்.

* விக்ரமிற்கு நியூசிலாந்தை சேர்ந்த வேட்டா நிறுவனம் மேக்-அப் போட்டிருக்கிறது. விக்ரம் மேக்அப் போட்டுக் கொண்டால் அது கலையாமல் இருக்க மைனஸ் டிகிரி குளிர் வேண்டுமாம். இதற்கென்றே ஒரு ஆள் மட்டும் அமர்ந்து கொள்கிற தனி பிரிசரை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மேக்அப் செலவு மட்டும் 5 கோடி.

* சீனா சண்டைக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அந்தரத்தில் நடக்கும் சைக்கிள் சண்டையும், ஒரிசாவில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தின் ஹைலெட்டாக இருக்கும். சீன சண்டைக்கு ஒரு மாதமும், ஒரிஸா சண்டைக்கு 25 நாளும் ஆகியிருக்கிறது.

* இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள் ஆகியிருக்கிறது படத்தை உருவாக்க. சீனாவில் 2 மாதங்கள் தங்கியிருந்து 40 சதவிகித படத்தை எடுத்திருக்கிறார்கள்.

* படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை 5 நாடுகளில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். சென்னையில் நடக்கும் விழாவில் ஒரு பிரபல ஹாலிவுட் ஹீரோ கலந்து கொள்கிறார். சில்வஸ்டர் ஸ்டோலன், டாம் குரூஸ், அர்னால்ட் இந்த மூவரில் ஒருவராக இருக்கலாம்.

* இந்திய மொழிகள் 6, உலக மொழிகள் 14 என 20 மொழிகளில் ரிலீசாகிறது ஐ.

* படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி.

தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்தி பிடிக்கப்போகும் ஐ ஒவ்வொரு தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். “ஆஸ்கர் விருதுகளை நாம் தேடிப்போக வேண்டாம். அதனை நம்மை தேடி வரச் செய்வோம்” என்பார் கமலஹாசன். அந்த நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Related Posts