விக்ரமின் அடுத்த அதிரடி ஆரம்பம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘10 எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமான இது ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது.

vickram

இப்படத்திற்குப் பிறகு ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இதில் விக்ரம், இயக்குனர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார்கள். ஷிபு தமீன்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், லடாக் மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது.

Related Posts