வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் அவரது உதவியாளர்களது சொந்த நிதி மூலம் மாதம் தோறும் வாழ்வாதார உதவிகள் வழக்கும் திட்டம் கடந்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டம் கடந்த சனிக்கிழமை மாலை வடக்கு மாகாண அவைத் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது துவிச்சக்கரவண்டிகள், தையல் இயந்திரங்கள், ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகள், வெல்டிங் வேலைக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் உள்ளிட்ட ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.