வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்!

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவைத்தனர்.

சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய வேளை வன்முறை கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. அதன் போது அயலவர்கள் கும்பலில் ஒருவரை மடக்கி பிடித்தனர்.

அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்த அயலவர்கள் சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாக பொலிசாரிடம் தாம் மடக்கி பிடித்து வைத்திருந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.

பொலிசாரின் பாதுகாப்பில் இருந்த நபர் சில நிமிடங்களில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதனால் அவரை பொலிஸாரே வேண்டும் என்று தப்ப வைத்தனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Posts