வாள் வீசிய ஐவருக்கு விளக்கமறியல்

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் வாளுடன் வெள்ளிக்கிழமை (02) கைதான சந்தேகநபர்கள் ஐவரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல கஹந்தவெல தெரிவித்தார்.

குறித்த நபர்களும் சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பாரதூரமான 6 குற்றச்செயல்களுடன் தொடர்பு உள்ளமை அறிமுடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக் குற்றச்செயல் ஒன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மானிப்பாய் பொலிஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் கைது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts