வாள் வீசியவர்களுக்கு விளக்கமறியல்

நல்லூர், கந்தர்மடத்தில் உள்ள பலசரக்கு கடை மீது, பெற்றோல் குண்டு வீசி, கடையில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஐவரும், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதுடன், யாழ். மாவட்ட நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் டி.சிவலிங்கம், உத்தரவிட்டுள்ளார்.

Related Posts