வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த செவ்வாய்கிழமை இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts