யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர், வாள் மற்றும் கத்திகளை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.