நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார்.
நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை முன் விரோதம் காரணமாக வயோதிபர் ஒருவர் மீது அசிட் வீச்சுடன், வாளால் வெட்டிய சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட வேளை, 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதில் ஏனைய நால்வர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அம்பாறை பகுதியில் தலைமதறைவாகியிருந்த நிலையில், நேற்று முன்தினம் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி அம்பாறை கெக்கராவ பகுதியில் அம்பாறை பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபரையும், மீட்கப்பட்ட முச்சக்கரவண்டியையும் நேற்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, மேற்படி நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்தி
நாவாந்துறை வாள் வெட்டு சம்பவம்: ஒருவர் கைது