சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘வாலு’ பட வேலைகள் முடிந்துள்ளது. வசன காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டது. தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
ஒரு பாடல் காட்சி பாக்கி உள்ளது. தனது கால்ஷீட்களை விரயம் செய்து விட்டதாகவும் எனவே பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றும் ஹன்சிகா அறிவித்து விட்டார்.
முன்னாள் கதாநாயகிகள் சிலரை ஆட வைத்து இந்த பாடல் காட்சியை படமாக்க சிம்பு திட்டமிட்டுள்ளார். இதில் ஆட நடிகைகள் சிம்ரன், மீனா ஆகியோரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பழம் பெரும் நடிகை சவுகார் ஜானகியையும் இதில் ஆட வைக்க முடிவு செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஏராளமான படங்களில் நடித்தவர் சவுகார் ஜானகி. இது போல் ரஜினி, கமல் படங்களில் மீனா நடித்து இருக்கிறார். விஜய், அஜீத்துடன் சிம்ரன் நடித்து இருக்கிறார்.
சிம்பு, மீனா, சிம்ரன், சவுகார்ஜானகி நான்கு பேரும் அந்த பாடல் காட்சியில் சேர்ந்து நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்ரனிடம் இதுகுறித்து கேட்டபோது, சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்னும் முடிவு ஏற்படவில்லை என்றார்.
சிம்பு ஏற்கனவே தனது படங்களில் குத்தாட்டங்கள் ஆடி இருக்கிறார். அந்த பாடலில் முன்னணி நடிகைகளையும் ஆட வைத்து இருக்கிறார்.
அது போல் வாலு படத்திலும் இவர்களை ஆட வைத்து பாடல் காட்சியை படமாக்குகிறார்.
ஹன்சிகாவுடன் சமரச பேச்சு நடக்கிறது. அவரும் இதில் ஆடுவார் என தெரிகிறது.