வாரியபொல யுவதி கைது

வாரியபொலவில் இளைஞர் ஒருவருக்கு அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி, வாரியபொல பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணியுடன் சரணடைந்த நிலையிலேயே பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

அந்த யுவதி செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முறைக்கேடான வசனங்களால் என்னை திட்டியமையால் நான் அவரை தாக்கினேன். பஸ் நிறுத்துமிடத்தில் எனக்கேற்பட்ட அநியாயத்தை அங்கிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்துகொண்டிருந்தனர்.

எனினும், எனக்கு ஆதரவாக குரல்கொடுப்பதற்கு யாரும் அப்போது வரவில்லை. அங்கிருந்தவர்கள் பார்த்துகொண்டிருந்தனர். எந்தவொரு ஊடகத்தின் வாயிலாகவும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் அதனையும் வீடியோ எடுக்கும் அளவிற்கு மனிதர்கள் இருக்கின்றனர். எனது பாதுகாப்புக்காக நான் முன்வந்தமை தவறா என்றும் தான் செய்த முறைப்பாட்டில் கேட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தகள்

வாரியபொல யுவதி பொலிஸில் முறைப்பாடு

வாரியப்பொல சம்பவம் – வெளிவரும் உண்மைகள்

Related Posts