வாய்ப் புற்றுநோயில் இலங்கைக்கு முதலாமிடம்!

உலகிலேயே வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

வாய்ப் புற்றுநோய் தோன்றுவதற்கு வெற்றிலையும் அது சார்ந்த பொருட்களுமே காரணம் என பல் வைத்திய சேவையின் பிரதிப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வெற்றிலை பாவிப்பவர்கள் அதன் பாவனையை முற்றாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் வெற்றிலைக்கு உள்ளடக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலைகளைத் தடுக்கவேண்டுமெனவும், ஆலயங்களில் புற்றுநோயைக்கொண்டுவரும் வெற்றிலையை வழங்குவது எதிர்காலத்தில் தடைசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts