வாய்ப்பாட்டு பயிற்சிப்பட்டறை

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம், புதுடெல்லியிலுள்ள கலாச்சார உறவுகளுக்கான இந்தியப்பேரவை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்திய இலங்கை அறக்கட்டளை மையம் மற்றும் வடக்கு மாகாணசபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு என்பவற்றுடன் இணைந்து நடத்தும் தெய்வீக சுகானுபவம் கலாச்சார விழாவின் வாய்ப்பாட்டு பயிற்சிப் பட்டறை திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.

3(2704)

நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையை தென்னிந்தியாவின் பிரபல்யமான இசைத்துறை மேதை வு.ஏ.ராம்பிரசாத் நடத்தினார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில், இசைத்துறையின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஆக்க நிகழ்வுகளின் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Related Posts