நாடளாவிய ரீதியில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று (19) பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மணித்தியாளத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனவே, நாடளாவிய ரீதியிலுள்ள கடற்கரை பகுதிகளில் குடியிருக்கும் மக்களும் மீன்பிடிக்கச் செல்வோரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வௌ்ளவத்தையில் இடம்பெற்ற சம்பவத்தைத் தவிர, நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது மாத்திரமே, தற்போதைக்கு சிறிய அனர்த்தமாக கருதப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்கு, 117 என்ற அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரத்திலும் செயற்பாட்டில் இருக்கும் என்றும் மேலும் கூறினார்.