வாட்டும் வெயிலில் சிறுகுழந்தைகளுடன் யாசகம் கேட்கும் பெண்கள்

யாழ்ப்பாணம் கைதடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால், இளம் வயதுடைய இரு பெண்கள், கையில் சிறு குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வருகின்றனர்.

தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவி வருகின்றது. இருந்தபோதும் அச்சிறு குழந்தைகளையும் கையில் ஏந்தியவாறு அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, அப்பெண்கள் வீதியில் நின்று யாசகம் கேட்டு வருகின்றனர்.

ஏ-9 வீதியில் பயணிப்போர் குறித்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு செல்வது வழமை. இவ்வாறு அவ்விடத்தில் தரித்து வழிபட்டு செல்வோர் மற்றும் பஸ்களில் பயணிப்போரிடம் இப்பெண்கள் யாசகம் கேட்கின்றனர்.

இதனால், போக்குவரத்தில் ஈடுபடுவோர் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனமெடுத்து, அச்சிறு குழந்தைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நலன்விரும்பிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts