வாடகை வீடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும்- தேர்தல் ஆணையாளர்

வாடகை விடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வீடுகளில் தங்கியிருப்பவர்களும் குறித்த முகவரிகளின் கீழ் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்படுவதனால் அவர்களுக்கு அந்த வீட்டின் உரிமை கிடைத்து விடாது.

வீட்டின் உரிமையாளரது வீட்டு உரிமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.நாடு முழுவதிலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாடகை மற்றம் குத்தகை அடிப்படையில் வீடுகளில் தங்கியிருக்கின்றார்கள்.

இவ்வாறானவர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எந்தவொரு நபருக்கும் அந்தந்த முகவரிகளின் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள உரிமையுண்டு.

கிராம உத்தியோகத்தரிடம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்காக விண்ணப்பங்களை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts