வாசு­தேவ நாண­யக்காரவின் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்த சுமந்­திரன்!

பிணை­முறி அறிக்கை குறித்து சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து செயற்­பட்­டன இது திட்­ட­மிட்ட சதி­யென கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்கார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்­வைத்த கோரிக்கை நியா­ய­மா­னது, சட்ட விதி­மு­றைக்கு ஏற்­ற­தா­கவே அமைந்­துள்­ளது என்று குறிப்­பிட்ட கூட்­ட­மைப்பின் எம்.பி. சுமந்­திரன் வாசு­தேவ நாண­யக்­கா­ரவின் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஒழுங்கு பிரச்­சினை எழுப்பி உரை­யாற்­று­கையில் கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார கூறு­கையில்.

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கைகள் நேற்­றைய தினம் ( நேற்று முன்­தினம்) விவா­தத்­திற்கு எடுத்­து ­கொள்­ளப்­ப­ட­வி­ருந்­தன. இவை விவா­தத்­திற்கு எடுத்­துக் ­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த நிலையில் கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் நானே விவா­திக்க தயா­ரானேன். எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தமிழ்மொழியில் இல்லாத கார­ணத்­தினால் தம்மால் விவா­தத்தில் ஈடு­பட முடி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி சுமந்­திரன் சபையில் முரண்­பட்டார். அவ­ரது கோரிக்­கையின் நியா­யத்தை கருத்திற் கொண்டு விவா­தத்தை பிற்­போட முடியும் என்­பதை நானும் ஏற்­றுக்­கொண்டேன். எனினும் அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்­ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்­த­வி­ருந்த விவா­தத்தின் போது மொழி பெயர்ப்பு பிரச்­சி­னை­யினை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெளி­ப்ப­டுத்­த­வில்லை. பாராளு­மன்ற செயற்­பா­டுகள் தொடர்­பி­லான கூட்­டத்­திலும் இந்தப் பிரச்­சி­னை­யினை முன்­வைக்­க­வில்லை. அப்­போ­தெல்லாம் வாய்­மூடி இருந்த சுமந்­திரன் ஏன் இறுதி நேரத்தில் விவா­தத்தை குழப்­பினார். ஏனெனில் பிணை­முறி அறிக்கை குறித்து நாம் சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க வேண்டும் என்ற தேவை அர­சாங்­கத்­திற்கு இருந்­தது. பிர­த­மரும் நெருக்­க­டியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணைந்து முன்­னெ­டுத்த சதி­யென நான் சபையில் குற்றம் சுமத்­து­கின்றேன் என குறிப்­பிட்டார்.

இதன்­போது சபையில் ஒழுங்கு பிரச்­சினை எழுப்பி கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பு எம்.பி. சுமந்­திரன் கூறு­கையில்,

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார கூறும் கருத்து தவ­றா­னது. நிலை­யியல் கட்­ட­ளைக்கு அமை­யவும் இது தவ­றா­னது.

1970 ஆண்­டு­களில் இருந்து பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வாசு­தேவ நாண­ய­க்கார இந்த காரணி குறித்து தெரிந்­தி­ருக்க வேண்டும். கடந்த 6 ஆம் திகதி விவாதம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த நிலையில் கூடிய கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இந்த விடயம் தொடர்பில் தெரி­வித்தேன். விவா­தத்தை பிற்­போட எமக்கு எந்த தேவையும் இல்லை. அறிக்­கைகள் ஆங்­கி­லத்தில் இருக்கும் நிலையில் விவா­தத்­திற்கு முன்னர் அறிக்கை தமிழ் மொழியில் வழங்­க­ப்பட வேண்டும் என கோரி­யி­ருந்தேன். சிங்­கள அறிக்­கையை வைத்து எம்மால் விவா­தத்தை நடத்த முடி­யாது. அவ்­வாறு இருக்­கையில் வாசு­தேவ நாண­ய­க்கார போன்­றவர் என்­னு­டைய இந்த கோரிக்­கைக்கு முரண்­ப­டு­வது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. நான் சட்ட ரீதியில் ஏற்­று­கொள்­ளக்­கூ­டிய கார­ணியை நான் முன்­வைத்தேன் என குறிப்­பிட்டார்.

இதன்­போது சபா­நா­யகர் பதி­ல­ளிக்­கையில் தெரிவித்ததாவது,

சுமந்­திரன் எம்.பி. முன்­வைத்த கார­ணி­களை நீதி சார்ந்­த­தாக நான் கரு­து­கின்றேன். பாரிய எண்­ணிக்­கை­யான ஆவணங்­களை கொண்ட அறிக்கை குறித்து விவாதம் நடத்­து­வது அவர்­க­ளுக்கு ஏற்ற மொழியில் இருக்க வேண்டும். எனினும் மொழி மாற்று நட­வ­டிக்­கை­களில் ஏற்­பட்­டுள்ள தாம­தமே இதற்கு கார­ண­மாகும். இதில் ஒரு­வ­ருக்கு ஒருவர் குற்றம் சுமத்­து­வதில் அர்த்­த­மில்லை. ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இந்த அறிக்­கையின் மொழி­மாற்று பிர­தி­களை முன்­வைக்­க­ வேண்டும் என நான் கேட்­டு ­கொண்­டுள்ளேன். விரைவில் அறிக்கை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் சபையின் பூரண இணக்கப்பாட்டுடன் விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.எனினும் விவாதத்தை ஒத்திவைக்க ஆளும் கட்சியின் சார்பில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பது நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts