வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜூன் மாதம் 29ஆம் திகதி, புடின், வாக்னர் கூலிப்படைத் தலைவரான பிரிகோஜினை சந்தித்ததாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரிகோஜின் புடினுக்கு எதிராக திரும்பியதைத் தொடர்ந்து, அவர் கொல்லப்படலாம் என்றும், புடின் துரோகிகளை மன்னிக்கமாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தளபதிகள் உட்பட 35 பேரை வரவழைத்து உக்ரைன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.