வாக்கு அட்டை விநியோகம் மாத இறுதியில் – தேர்தல்கள் செயலகம்

elections-secretariatவடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக, தேர்தல்கள் திணைக்களம் இந்த மாதம் 27ம் திகதி வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது.

தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி விசேட தினமாக அறிவித்து, வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பணிகளுக்கான இறுதி தினமாக அடுத்த மாதம் 13ம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Posts