வாக்குப்பெட்டியில் வேட்பாளரின் ஸ்ரிக்கர்!

vote-box1[1] (1)நடந்து முடிந்த வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுகொண்டிருக்கின்ற நிலையில் வாக்குப்பெட்டியொன்றை சுற்றி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் விருப்பு இலக்கம் மற்றும் கட்சி சின்னத்துடன் கூடிய ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ் மத்தியக்கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்திற்கு வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டியிலேயே இவ்வாறு ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அளிக்கப்பட்ட வாக்குகளுக்கும் குறித்த வாக்குப்பெட்டியில் இருக்கின்ற வாக்குச்சீட்டுகளுக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுமாயின் அந்த வாக்குப்பெட்டிலுள்ள வாக்குச்சீட்டுகளை எண்ணுவது நிறுத்திவைக்கப்பட்டு தேர்தல்கள் ஆணையாளரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என்று அந்த பெட்டி வைக்கப்பட்டிருக்கின்ற அறைக்கு பொறுப்பான உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

Related Posts