வாக்காளர் பெயர்ப் பதிவு படிவத்தை கையளித்துவிட்டீர்களா?

018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை (பிசி படிவம்) துரிதமாக முழுமை செய்து, கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி இப்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்காளர் பெயர்ப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் மீளாய்வு செய்யப்படும். வாக்காளர் பெயர்ப் பட்டியல் மீளாய்வு நடவடிக்கைகள் மே மாத நடுப் பகுதியில் ஆரம்பமாகும். ஜுன் முதலாம் திகதி வாக்காளர் தினம். அன்றைய தினம் சகல வாக்காளர்களையும் பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில், மே மாத நடுப் பகுதியில் இதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

கிராம அலுவலர்கள் ஊடாக, வாக்காளர் பதிவு விண்ணப்பப் படிவம் (பி.சி.படிவம்) விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே அவற்றை முழுமை செய்து வழங்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வாக்காளர் பெயர்ப் பட்டியலைப் பதிவு செய்வதற்கான படிவங்கள் (பிசி படிவம்) கிடைக்கப் பெறாதவர்கள் கிராம அலுவலரைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts