2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக எதிர்வரும் தோர்தல்களில் வாக்களிப்பதற்கு இவர்கள் தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு வாக்களார் இடாப்புக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 ஆகும்.
இதற்கு அமைய 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிலும் பார்க்க வாக்காளர்களின் எண்ணிக்கை 271,789 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மாவட்டத்துக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதாசாரத்தை கவனத்தில் கொள்ளும் போது காலி மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்று ஆக குறைவடைந்துள்ளது.
காலி மாவட்டத்துக்காக இது வரையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை பத்தில் இருந்து 9 ஆக குறைவடைந்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.