வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்!

அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். இதனால் வடக்கில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைகிறது.

வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைந்து செல்லும். இதனால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts